Thursday 3 April 2014

இடுக்கண் களைவது நட்பு...


 
 
 
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம். அது நேர்மை, நேசம், பிறருக்கு உதவுதல், அடுத்தவர் நலம் பேணல் போன்ற பண்புகளைச் சொல்லித் தருகிறது. இதன் நோக்கம் ஒரு நண்பர் நேரான பாதையில் நடந்தால், அவருக்குத் தேவையான உதவி ஒத்தாசைகளை நாம் செய்து தர வேண்டும். அவர் தவறு செய்தால், அவரை நல்வழிக்குக் கொண்டு வர வேண்டும். இதையே பின்வரும் நபி மொழியும் கூறுகிறது.
"ஒருவர் தனது சகோதரருக்கு உதவட்டும். அவர் அநீதி இழைப்பவராகவோ - அநீதி இழைக்கப்படுபவராகவோ இருந்தாலும் சரியே! அவர் அநீதி இழைப்பவராக இருந்தால் அவரைத் தடுத்து நிறுத்தட்டும். அவருக்கு அது நலம் விளைவிக்கும். அநீதி இழைக்கப்பட்டவராக இருந்தால், அவருக்கு உதவி புரியட்டும்!''
-முஸ்லிம்.
மனிதன் பிறந்தான், வாழ்ந்தான், மறைந்தான் என பிறர் சொல்ல வாழ்வது வாழ்க்கையல்ல. "இவரைப்போல் இனி யார் வாழ்ந்து காட்ட முடியும்?''என ஒவ்வொரு மனிதனும் பாராட்டப்படும்படி  வெற்றி முத்திரை பதிக்க வேண்டும். இதற்குத் தேவை, இறையச்சம், நற்பண்பு, நேர்மை, நாணயம் மட்டும்தான் என்பதை எவரும் மறுக்க இயலாது.
வான்புகழ் வள்ளுவர் நட்பு பற்றி இரண்டே வரிகளில் கூறுவதைக் காண்போம்:
"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதுஆம் நட்பு''.
நாம் யார் யாருடன் தோழமை கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாத்தின் நான்காவது கலீஃபாஅலீ (ரலி) அவர்கள் கூறுவதைக் காண்போம்:
"பொய் பேசுபவனிடம் நட்புக் கொண்டால், நன்மையைத் தீமையாகவும், கெட்டதை நல்லதாகவும் கூறுவான். கஞ்சனிடம் நட்பு வைத்தால், ஒரு கவளச் சோற்றுக்காக உன்னையே விற்று விடவும் தயங்க மாட்டான். முட்டாளுடன் நட்புக் கொண்டால், தன்னை அறியாமலேயே கேட்டில் மாட்டிவைத்து விடுவான்.
சாபமிடும் பழக்கமுள்ளவனிடம் தோழமை கொண்டால், ஒருநாள் உன்னையும் சபித்துவிடுவான். உனது முகத்திற்கு முன் புகழ்பவனிடம் நட்புக் கொண்டால், உன்னை ஒருநாள் இகழ்ந்து பேசுவான்.
எனவே, தோழமை கொள்ள இறையச்சம் கொண்ட நல்ல மனிதரே சிறந்தவராவார். அவரிடமே நட்புக்கொண்டு இறையன்பைப் பெற்று நலமுடனும் வளமுடனும் வாழ்வோம

No comments:

Post a Comment